மேலும் செய்திகள்
கடலுார், பண்ருட்டியில் அண்ணாதுரை பிறந்த நாள்
16-Sep-2025
மதுரை : மதுரை உற்பத்தித் திறன் குழுவின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராஜேந்திரபாபு தலைமையில் நடந்தது. செயலாளர் ஜெகன்மோகன் ஆண்டறிக்கை வாசித்தார். கே.எம்.கிருஷ்ணமூர்த்தி தணிக்கை செய்த சங்க வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். சங்க விதிமுறை மாற்றம் குறித்து ஒப்புதல் பெறப்பட்டது. தேர்தல் அதிகாரி சேதுபதி 2025 - 27 க்கான புதியநிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தினார். இதில் தலைவராக ஜெகன்மோகன், துணைத் தலைவர்களாக லட்சுமணன், சவுந்தரராஜன், செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலாளராக சன்சாய், பொருளாளராக சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் திருவேங்கடசாமி, அறிவழகன், அருள்தாஸ் கந்தையா, ராமமூர்த்தி, ராஜேந்திரன், தியாகராஜன், கந்தசாமி தேர்வு செய்யப்பட்டனர்.
16-Sep-2025