மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழாவில் இரு நுால்கள் வெளியீடு
16-Jan-2025
மதுரை: 'நமது வாழ்விற்குரிய இலக்கணம் திருக்குறளும் நாலடியாரும். அவை நம்மை வழிநடத்தும் சட்டபுத்தக நுால். அதில் அனைத்துக்குமான தகவல்கள் இருக்கின்றன' என பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசினார்.மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 'நாலும் இரண்டும்' என்ற தலைப்பில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி முன்னிலை வகித்தார். ஞானசம்பந்தன் பேசியதாவது: இரண்டு அடிகளான திருக்குறளையும், நான்கு அடிகளான நாலடியாரையும் எந்த மேடையிலும் பேசலாம். நாலடியார் படித்தால் எந்த சபையையும் வெல்லலாம். இதில் வான்சிறப்பு, விருந்தோம்பல், கல்வி, ஒழுக்கம், நாகரிகம் என அனைத்து கருத்துகளும் அடங்கியுள்ளன. இரண்டிலும் உள்ள ஆழமான கருத்துகளால் ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.திருக்குறளில் இல்லறத்திற்கு பிறகு துறவறம் வரும். நாலடியாரில் துறவறத்திற்கு பிறகு இல்லறம் வரும். திருக்குறளும், நாலடியாரும் நமது சட்டப்புத்தகம். நம்மை வழிநடத்தும் கலங்கரை விளக்கம். திருக்குறளுக்கு உரையாசிரியர்கள் எழுதிய கட்டுரையையும் படிக்க வேண்டும்.நாம் கேட்கும் செய்தி நமது வாழ்நாள் முழுவதும் உடன்வரும். சொற்களுக்கு அவ்வளவு வலிமை உள்ளது. திருக்குறளில் மருத்துவ குணம் உடைய கருத்துகளும் அடங்கியுள்ளன. தாடை எலும்பு எவ்வளவு அடித்தாலும் உடையாது என்ற கூற்று திருக்குறளில் உள்ளது. அனைத்து துறை தகவலும், வாழ்விற்குரிய இலக்கணமும் இரண்டிலும் அடங்கியுள்ளன, என்றார்.எழுத்தாளர் ராமநாதன் எழுதிய '50 ஆண்டுகளில் நடந்ததும் கடந்ததும்' கட்டுரை நுால், அரசு பள்ளி ஆசிரியர் காளிதாஸ் எழுதிய மென்னி, மை கவிதை நுால்களுக்கு மதிப்புரை நிகழ்ச்சி நடந்தது. யாதவர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் இணைப் பேராசிரியர் பாலுசாமி, சங்க ஆய்வு வளமையர் ஜான்சிராணி, மாணவர்கள் பங்கேற்றனர்.
16-Jan-2025