உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிப்காட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சிப்காட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கொட்டாம்பட்டி: வஞ்சிநகரம், பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் தமிழக அரசு சார்பில் நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 18 கிராம மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகி உடையப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க தலைவர் முகிலன், கனிமவள கொள்ளை தடுப்பு கூட்டமைப்பு நிர்வாகி செல்வராஜ் பங்கேற்றனர். கல்லங்காடு பகுதியை பாதுகாக்க வேண்டிய பல்லுயிர் மரபு தலமாகவும், பிற பகுதிகளை மேய்ச்சல் நிலமாகவும், கோயில் காடுகளாக வகைப்பாட்டை மாற்ற கோரியும் கோஷங்கள் எழுப்பினர். 20 கண்மாய்கள், விவசாயம், கோயில்கள்,மேய்ச்சல் நிலங்களாக உள்ளதால் சிப்காட் தேவையில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ