உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கால்வாய்களை துார்வார புதிய வாகனம் வழங்கல்

கால்வாய்களை துார்வார புதிய வாகனம் வழங்கல்

மதுரை: மதுரை மாநகராட்சியில் வாய்க்கால்கள், மழைநீர் கால்வாய்களில் துார்வாருவதற்காக தனியார் சார்பில் ரூ.7.67 லட்சத்தில் வழங்கப்பட்ட 'மினி எக்ஸ்கவேட்டர்' வாகனத்தை கமிஷனர் சித்ரா துவக்கி வைத்தார். மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் ரோட்டோர மழைநீர் வாய்க்கால்கள், கால்வாய்களை துார்வார தற்போது 6 மினி எக்ஸ்கவேட்டர் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கூடுதல் வாகனங்கள் தேவையாக உள்ளது. இதையடுத்து தனியார் பங்களிப்பாக மாநகராட்சிக்கு இந்த வாகனம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைமேயர் நாகராஜன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், உதவிப் பொறியாளர் (வாகனம்) அமர்தீப், கவுன்சிலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ