உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாய்களால் பொது மக்கள் அச்சம்

நாய்களால் பொது மக்கள் அச்சம்

பேரையூர்: பேரையூர் பகுதியில் கட்டுக்கடங்காமல் நாய்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர்.இங்குள்ள 15 வார்டுகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூட்டமாக திரியும் நாய்களால் இப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். வாகனங்கள் வரும்போது சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவது தொடர்கிறது. வாகனங்களில் செல்வோரை துரத்தி வருவதால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுவதும், பள்ளத்தில் விழுந்து காயமடைவதும் நடக்கின்றன.அதிகரிக்கும் நாய்களின் தொல்லையால் குழந்தைகள் தெருக்களில் விளையாட முடியவில்லை. சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உள்ளது. நாய் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை