உள்ளூர் செய்திகள்

 வினாடி வினா

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சார்பில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த வினாடி வினா போட்டி நடந்தது. உதவித் தலைமை ஆசிரியர் விஜயரங்கன் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் ஆல்பர்ட் பிரான்சிஸ் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். தீயணைப்பு வீரர்கள் பாப்பையன், ஸ்ரீதர், பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை