மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
26-Oct-2024
திருமங்கலம் : திருமங்கலம் வேளாண் துறையின் தொழில்நுட்ப மேலாண் திட்டம் (அட்மா) சார்பில் 2024--25ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கப்பலுாரில் விவசாயிகள் முன்னேற்ற குழுவுக்கு ராபி பருவ பயிற்சி நடந்தது.உதவி இயக்குனர் மயில் தலைமை வகித்தார். உதவி அலுவலர் ராஜேந்திரன், திட்ட மேலாளர் புஷ்பமாலா, உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், முன்னோடி விவசாயி காளிமுத்து, உதவி தொழில் நுட்ப மேலாளர் பூவேந்திரன் பங்கேற்றனர்.உதவி மேலாளர் மூவேந்திரன் ஏற்பாடுகளை செய்தார்.
26-Oct-2024