மேலும் செய்திகள்
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
மதுரை: மதுரை ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் தட்சிண ரயில்வே ஓய்வூதியர்கள் சங்கம் (டி.ஆர்.பி.யூ.,), மத்திய மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. கோட்ட ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்புக்குழு மாவட்டத் தலைவர் பிச்சைராஜன் முன்னிலை வகித்தார். மத்திய அரசு, 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். ஓய்வூதியர்களை பிரிக்கும் நிதிச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அனைத்து துறை ஓய்வூதியதாரர்களுக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அனைத்திந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க கோட்டச் செயலாளர் சேகர், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் சுந்தரராஜன், அரசு ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், மாநில வருமான வரி ஓய்வூதியர் சங்க மண்டல செயலாளர் துளசிராம், ஓய்வுபெற்ற ஆசிரியர் நலவாரிய மாவட்ட தலைவர் சாலமோன் ஆகியோர் பேசினர். டி.ஆர்.பி.யூ., கோட்டச் செயலர் சங்கர நாராயணன் நன்றி கூறினார்.
4 hour(s) ago