உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முன்னெச்சரிக்கை இன்றி நடந்த ரயில்வே மேம்பால பணிகள் திருமங்கலத்தில் நேற்று திக்... திக்...

முன்னெச்சரிக்கை இன்றி நடந்த ரயில்வே மேம்பால பணிகள் திருமங்கலத்தில் நேற்று திக்... திக்...

திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் நடக்கும் பாலப்பணியில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, ராட்சத கிரேனை பயன்படுத்தி இரும்பு கர்டரை துாக்கி வைப்பதால் பொது மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர்.இங்கு ஓராண்டுக்கு முன்பாக பாலம் அமைக்கும் பணி துவங்கியது. பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தாத நிலையில் பணிகள் மிக மெதுவாகவே நடக்கின்றன. நேற்றைய பணியின் போது, பாலத்தின் ஒரு பகுதியில் இரும்பு கர்டர்கள் பொருத்தினர். இரும்பு கர்டர் ஒவ்வொன்றும் 32 டன் எடை கொண்டவை.இத்தகைய 5 கர்டர்கள் ராட்சத கிரேன்கள் மூலம் 30 அடி உயரம் துாக்கி வைக்கப்பட்டன. போக்குவரத்தை நிறுத்தாமலும், மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யாமலும் பணிகள் நடந்தன.கோடை விடுமுறைக்குப் பின் நேற்று பள்ளிகள் துவங்கியதால் மாணவர், பெற்றோர், பள்ளி வாகனங்கள் என அதிக போக்குவரத்து இருந்தது. ஆனால் முன்னெச்சரிக்கையும், எந்தவித பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியை கடந்து சென்ற அனைவரும் அச்சத்தோடு சென்றனர். இதுபோன்ற பணிகள் நடக்கும்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதோடு, வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை