ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அலுவலகம் திறப்பு
மதுரை:கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையருக்காக புதிய கூடுதல் கட்டடம் நேற்று மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவாயில் அருகில் திறந்து வைக்கப்பட்டது.முதன்மை தலைமை ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ஈஸ்வர ராவ் திறந்து வைத்தார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமை வகித்தார். இக்கட்டடம் 380 சதுர மீட்டர் பரப்பில் ரூ.1.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு தரைத்தளத்தில் (190 சதுர மீட்டர்) பாதுகாப்பு படை உதவி ஆணையர் அலுவலகம், துணை அலுவலகங்கள் தரை தளத்திலும், முதல் தளத்தில் (190 சதுர மீட்டர்) கூட்ட அரங்கம், குற்றப்பிரிவு அலுவலகம் ஆகியவையும் உள்ளன.முதுநிலை முதன்மை பொறியாளர் எம். கார்த்திக், பகுதி பொறியாளர் சூரியமூர்த்தி, ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் செஞ்சையா, ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் சிவதாஸ் பங்கேற்றனர்.