மழை, வெள்ளமா எச்சரிக்கும் செயலி
மதுரை : மழைக்காலத்தில் கனமழை குறித்த தகவல், வானிலை முன்னெச்சரிக்கை, மழையளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறித்த விவரங்களை தமிழில் அறிந்து கொள்ள தமிழக அரசின் 'TN Alert' செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சங்கீதா தெரிவித்தார். அவர் கூறியதாவது: இந்த செயலியில் பருவநிலை தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.பேரிடர் காலத்தில் இயற்கை இடர்பாடு தொடர்பான புகார்களுக்கு மாநில கட்டுப்பாட்டு அறை 1070க்கும், மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077 க்கும் தொடர்பு கொள்ளலாம்.மேலும் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 0452 - 254 6161, வாட்ஸ்ஆப் புகார்களுக்கு 96550 66404ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.