மேலும் செய்திகள்
முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் கார்கே
30-Jul-2025
மதுரை,: மதுரை எஸ்.எஸ்.காலனியில் அகண்ட ஹிந்து ராஷ்டிரா நிறுவன தலைவர் கருணாநிதி தலைமையில் ர க் ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. பா.ஜ., வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் அய்யப்பன்ராஜா, துணைத்தலைவர் கணேசன், ஓ.பி.சி.அணி மாவட்ட தலைவர் ரேணுகா பங்கேற்றனர். இதில் அகண்ட ஹிந்துராஷ்டிராவைச் சேர்ந்த வேளிர், மக்கள் கட்சித் தலைவர் பாலசுப்ரமணியன், பா.ஜ., அலுவலக செயலாளர் சுரேஷ், துறவிகள் மாநில தலைவர் ஆனந்தா சுவாமிகள், எஸ்.எஸ்.காலனி மண்டலதலைவர் பாண்டி, மாநில மனித உரிமை அமைப்பின் தலைவர் பிச்சைவேல், முக்குலத்தோர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் ஜெயக்குமார் பங்கேற்றனர். பெண்கள் சகோதரத்துவத்தை வலியுறுத்தி அனைவருக்கும் ராக்கி கயிறு கட்டினர். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை கண்டித்து உறுதிமொழி எடுத்தனர்.
30-Jul-2025