உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

மதுரை: 'மகளிர் உரிமைத்தொகை மாதம் ௧,000 ரூபாய் வழங்கப்படும் நிலையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ௧,000 ரூபாய் வழங்குவது அநீதி' என தெரிவித்துள்ள தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் எனும் 'டாக்பியா' நேற்று மாநில அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று முதல், ரேஷன் கடைகளில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளனர். மதுரையில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மாவட்ட தலைவர் கணேசன், செயலர் பாருக் அலி, கவுரவ செயலர் ஆசிரியத்தேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை