ராயகோபுரம் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரிய வழக்கு
மதுரை: ஆலயம் காப்போம் பவுண்டேஷன் நிறுவனர் ரமணன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரே ராய கோபுரம் உள்ளது. இது நாயக்கர் மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. முற்றுப்பெறாத இக்கோபுரம் சிற்பக் கலைக்கு சிறந்த முன்னுதாரணம். அதை ஆக்கிரமித்து சிலர் கடைகள் நடத்துகின்றனர். இதனால் சிற்பங்கள் மறைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தை சுற்றிலும் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள், அங்கீகாரமற்ற கட்டுமானங்களை அகற்ற வேண்டும். புதுமண்டபம் அமைந்துள்ள அப்பகுதியில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அறநிலையத்துறை செயலர், கமிஷனர், மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.