வரவேற்புக்குழு அமைப்பு
மேலுார் : மேலுாரில் சி.ஐ.டி.யு., புறநகர் மாவட்ட மாநாடு ஆக. 24 ல் நடக்க உள்ளது. இம் மாநாட்டுக்கான வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் நடந்தது. மேலுார் வட்ட பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் மணவாளன் வரவேற்றார். மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சிவாஜி, மாவட்ட செயலாளர் அரவிந்தன், நிர்வாகிகள் பிச்சை ராஜன், சவுந்தரராஜன் பேசினர். வரவேற்பு குழுத் தலைவராக மணவாளன், செயலாளராக சேகர், பொருளாளராக மலை கண்ணன் மற்றும் 100 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.