உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மறுவாழ்வு சிகிச்சை முகாம்

மறுவாழ்வு சிகிச்சை முகாம்

மதுரை: மதுரை தானம் அறக்கட்டளை, சுகம் அறக்கட்டளை சார்பில் வலையபட்டி குளோரி ஓசா டெல் பயிற்சி மையத்தில் 10 நாட்கள் மது போதை மறுவாழ்வு சிகிச்சை முகாம் நடந்தது. மது போதையில் இருந்து விடுபட நினைக்கும் 25 பேருக்கு மனநல டாக்டர் சுகபரணிதரன் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விவேகானந்தா யோகா பயிற்சி மையம் மூலம் சிலம்ப பயிற்சியும் யோகா ஆசிரியர்கள் சுரேந்திரன், உமா மகேஸ்வரன் யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆல்கஹாலிஸ் அனானிமஸ் குழு நிர்வாகி ராம்குமார் கலந்துரையாடினார். கிராமப்புற மண்டல சுகாதார ஒருங்கிணைப்பாளர் முத்தையா, தானம் மக்கள் கல்வி நிலைய பயிற்றுநர் பால்சாமி ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ