உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்காச்சோளத்துக்கு நிவாரணம்

மக்காச்சோளத்துக்கு நிவாரணம்

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மண்டல துணை தாசில்தார் வீரக்குமார் தலைமையில் நடந்தது. இதில் தங்களாச்சேரி, பன்னிக்குண்டு, பொக்கம்பட்டி, சாத்தங்குடி பகுதி விவசாயிகள் கடந்த ஆண்டு முழுமையாக பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மக்காச்சோள பயிர் களுடன் பங்கேற்றனர். தங்களாச்சேரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பால்பாண்டி பேசியதாவது: இத்தாலுகாவில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடுவது வழக்கம். 2025 ல் மக்காச்சோளத்திற்கு பயிர் காப்பீடு செய்தோம். படைப்புழு தாக்குதல் மற்றும் வறட்சியால் மக்காச்சோள பயிர் முழுவதும் பாதிக்கப்பட்டது. ஆனால் பயிர் காப்பீடு முழுமையாக விவசாயிகளுக்கு வரவில்லை. இதுகுறித்து பலமுறை விவசாயத்துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று கூறியும் யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை. காப்பீடு செய்யுங்கள் என மட்டும் விவசாயத்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி தங்களது இலக்கை நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஆனால் காப்பீடு வராத பட்சத்தில் விவசாயிகளுக்கு உரிய தீர்வை அவர்கள் தருவது இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை பெற்று தர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ