உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம்

மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம்

மதுரை: சிவகங்கை மாவட்டம் கொந்தகையைச் சேர்ந்தவர் தற்காலிக மின்ஊழியர் ஜெயக்குமார் 45. இவர் மே 25ல் மதுரை கோமதிபுரம் மல்லிகை வீதி டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டபோது தவறி விழுந்து இறந்தார். 3 குழந்தைகள் உள்ள நிலையில் அவரது குடும்பத்திற்காக கோமதிபுரம் தென்றல் நகர், கோமதிபுரம் வடக்கு ஆகிய குடியிருப்போர் சங்கத்தினர் 100 தன்னார்வலர்களிடம் ரூ.1.50 லட்சம் வசூலித்தனர்.அதை ஜெயக்குமார் மனைவி வாசுகியிடம் சங்க நிர்வாகிகள் சித்திக், ராகவன், பழனிக்குமார், ரகுபதி, திரவியம், காசி, சங்கர், குருசாமி, நரசிம்மராஜ், திருஞானசம்பந்தன், ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி