ராமகிருஷ்ண மடம் சார்பில் ரூ.1292 கோடிக்கு நிவாரணப்பணி
மதுரை: மேற்குவங்க மாநிலம் பேலுார் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் தலைமையகத்தில் ராமகிருஷ்ண மடங்களின் 115வது வருடாந்திர கூட்டம் நடந்தது. இதில் உலகம் முழுவதும் 2023-24ம் ஆண்டு செய்த சமூக நலப் பணிகள், நிவாரண பணிகள் குறித்து விளக்கப்பட்டன.குறிப்பாக தேசிய அளவில் 235 மடம் மற்றும் மிஷன் மூலமாக ரூ.1292 கோடி மதிப்பிலான நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தொகையானது வெள்ள நிவாரண பணி, பொதுநலம், மருத்துவம், கல்வி உதவித்தொகை, அன்னதானம், இலவச உடைகள், கிராமப்புற வளர்ச்சிக்கு செல விடப்பட்டுள்ளது.கடந்தாண்டு மதுரை ராமகிருஷ்ண மடம் ரூ.31.73 லட்சம் மதிப்பீட்டில் சேவை பணிகள் செய்தது குறிப்பிடத்தக்கது.