மேலும் செய்திகள்
மதுரையில் 12 விமானங்கள் ரத்து
7 minutes ago
நாயகி ஆன பேஷன் டிசைனர் சுஷ்மா நாயர்
8 minutes ago
லயத்துடன் லலிதா ரஜினி, கமல் பாராட்டிய நடிகை
9 minutes ago
பிரதீபாவும்,கார்த்திகாவும் கேமராவும்!
10 minutes ago
மதுரை: 'இளம் சிறார் பாதுகாப்பு சட்டப்படி அனாதை மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க எந்த ஒரு மதமும் தடையல்ல,' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் மதுரையில் பேசினார். அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம்( ஏ.பி.வி.எஸ்.) சார்பில்'குழந்தை தத்தெடுப்பு சட்டங்கள்- பிரச்னைகளும், தீர்வுகளும்'-தலைப்பில் மதுரையில் கருத்தரங்கு நடந்தது. ஏ.பி.வி.எஸ்.தென் தமிழக தலைவர் ராஜேஷ் சரவணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சபிதா வரவேற்றார். நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் பேசியதாவது: ஹிந்து தத்தெடுப்பு சட்டம் (1956) ஹிந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். பிற மதத்தினருக்கு பொருந்தாது. குழந்தை இயற்கையான தாய், தந்தையரிடம் இருந்தபோது சொத்துரிமை உட்பட என்னென்ன உரிமைகள் இருந்ததோ, அந்த அனைத்து உரிமைகளையும் தத்தெடுத்தபின் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் பெற முடியும். குழந்தையின் முந்தைய குடும்ப உரிமை அற்றுப்போகும். ஒரு தாய், தந்தையருக்கு குழந்தை இல்லாதபோது தத்தெடுக்க நினைக்கின்றனர். தந்தை இறந்தபின், தாய் ஒரு குழந்தையை தத்தெடுத்தால் தந்தை இறந்த நாளில் என்னென்ன உரிமைகள் இருந்ததோ அதை குழந்தை பெற முடியும் என்பது பழைய விதி. அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தில் அமைதி பாதிக்கக்கூடாது என்பதற்காகவே இம்மாற்றம். சட்டப்படி தத்தெடுக்கப்பட்டால் அதை நீதிமன்றம் உள்பட யாரும் ரத்து செய்ய முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவரும் சமம் என்கிறது. தனிப்பட்ட உரிமைகள் என வருகிற போது சிறப்பு சட்டங்கள் உள்ளது நிதர்சன உண்மை. குற்றக்கண்ணால் பார்க்கக்கூடாது இந்தியாவில் இளம் சிறார் பாதுகாப்பு சட்டம் 2015ல் கொண்டுவரப்பட்டது. அதன்படி 18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் சட்டத்திற்கு மாறுபாடாக நடந்து கொள்ளும்போது அவர்களை குற்றக்கண் கொண்டு பார்க்கக் கூடாது. அப்பாவியாக பார்க்க வேண்டும். அனாதை மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளை படிக்க வைத்து நல்ல நிலையில் வளர்த்தாலும் தாய், தந்தை, உறவுகள் இல்லையே என வாழ்நாள் முழுவதும் தாழ்வு மனப்பான்மை இருக்கும். அதை யாராலும் சரி செய்ய முடியாது. இந்த மாறாத வடுவை சரி செய்வது சமூகத்தின் கடமை. இதை நிறைவேற்றத்தான் இளம் சிறார் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அத்தகைய குழந்தைகளை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம், பாதுகாப்பை இளம்சிறார் பாதுகாப்பு சட்டம் தருகிறது. இதனடிப்படையில் குழந்தையை யாரும் தத்தெடுக்கலாம். அதற்கு எந்த ஒரு மதமும் தடையல்ல. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட எந்த மதத்தைச் சார்ந்தவராகவும் இருக்கலாம். அனைவருக்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி அரசியலமைப்பு சட்டத்தின் 44 வது பிரிவு வலியுறுத்துகிறது. அதை அனைவரின் ஒப்புதலுடன் உருவாக்கும்வரை ஹிந்து அல்லாதவர்களுக்கு இளம் சிறார் பாதுகாப்புச் சட்டம் தேவைப்படுகிறது. இவ்வாறு கூறினார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஏ.பி.வி.எஸ்.,தென் தமிழக பொதுச் செயலாளர் கேசவன், வட தமிழக தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் பாபு, அகில பாரதிய அதிவக்தா பரிஷத் (ஏ.பி.ஏ.பி.,) தேசிய துணைத் தலைவர் ராஜேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிக்குமார், வழக்கறிஞர்கள் ஸ்ரீனிவாச ராகவன், தங்கம் பங்கேற்றனர்.
7 minutes ago
8 minutes ago
9 minutes ago
10 minutes ago