மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் தீர்வு
13-Sep-2026
சோழவந்தான்: சோழவந்தான் ஆர்.எம்.எஸ்., காலனி அருகே மதுரை மெயின் ரோட்டில் வாகனங்களின் வேகத்தை குறைக்க சில ஆண்டுகளாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் இருவழிப்பாதை ஒருவழிப்பாதையாகி அடிக்கடி போக்குவரத்து நெரிசல், வாகன விபத்துகள் நடந்தன. அதிகாரிகள், போலீசாரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுப்பையா உடனே நடவடிக்கை எடுத்து தடுப்புகளை அகற்றினார். அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
13-Sep-2026