உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ராஜகோபுரத்தில் திருப்பணிகள் துவக்கம்

ராஜகோபுரத்தில் திருப்பணிகள் துவக்கம்

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜ கோபுரத்தில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கியது.கோயிலில் பிப்.10ல் ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை விமானம், வல்லப கணபதி விமானம், காசி விஸ்வநாதர் கோயில் விமானங்களுக்கு பாலாலயம் நடத்தப்பட்டது. கோவர்த்தனாம்பிகை, வல்லப கணபதி, காசி விஸ்வநாதர் கோயில் விமானங்களில் வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது.ராஜகோபுரத்தில் மூங்கில் சாரங்கள் கட்டும் பணி நிறைவடைந்து, சுதைகளில் பராமரிப்பு பணி துவங்கியது. மூலஸ்தான துாண்களில் வாட்டர்வாஷ் பணி நடக்கிறது. மூலஸ்தானத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அத்திமரத்தால் உருவாக்கப்பட்ட மூலவர்களின் சிற்பங்களை சண்முகர் சன்னதியில் எழுந்தருள செய்து பூஜை, அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை