உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அஷ்டமி சப்பர பாதையை சீரமைங்க

அஷ்டமி சப்பர பாதையை சீரமைங்க

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் நிகழ்வான அஷ்டமி சப்பரம் ஆண்டுதோறும் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியில் நடக்கிறது. இந்தாண்டு சப்பரம் புறப்பாடு டிச. 23ல் நடக்கிறது. மழை காரணமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. நகரில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் மீனாட்சி அம்மன் கோயில் சப்பரம் தடையுமின்றி நடக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர்.'சப்பரம் வரும் பாதையை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து முழுமையாக சீர் செய்ய வேண்டும். சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் பல்வேறு காரணங்களால் தாமதமானதை கவனத்தில் கொண்டு அஷ்டமி சப்பரம் சிறப்பாக நடக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் சுந்தர வடிவேல் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை