உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அம்மச்சியாபுரத்தில் ஆய்வு

அம்மச்சியாபுரத்தில் ஆய்வு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கிடந்ததையடுத்து சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார். கிராமத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளிடம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த விவரத்தையும் கேட்டறிந்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கணேசன், ராதாகிருஷ்ணன், விவசாய அணி குமார், மகளிரணி சாந்தி, முன்னாள் கவுன்சிலர் தங்கபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். எம்.எல்.ஏ.,வும் ஆய்வு தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடேசனும் ஆய்வு செய்தார். பைப் லைன்கள் முழுவதையும் மாற்றி குழாய் இல்லாத வீடுகளுக்கு இணைப்பு வழங்க உத்தரவிட்டார். மேலும் எம்.எல்.ஏ., நிதியில் புதிதாக போர்வெல் அமைத்து குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் தெரு விளக்குகள் அமைக்கவும் ஏற்பாடுகளை செய்தார். பி.டி.ஓ., லட்சுமி காந்தம், மண்டல துணை பி.டி.ஓ., பூர்ணிமா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை