உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மூத்த தம்பதிகளுக்கு மரியாதை

மூத்த தம்பதிகளுக்கு மரியாதை

மதுரை: ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் 70 வயதிற்கு மேற்பட்ட தம்பதிகளுக்கு கோயிலில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மீனாட்சி அம்மன் கோயிலில் 4 மூத்த தம்பதிகளுக்கு மரியாதை அளிக்கப்பட்டு சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி, அறங்காவலர்கள் செல்லையா, டாக்டர் சீனிவாசன், மீனா, இணைகமிஷனர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருமங்கலம் மீனாட்சி சொக்க நாதர் கோயிலில் 6 தம்பதிகளுக்கு பட்டு சேலை, வேட்டி சட்டை, பழங்கள் அடங்கிய ரூ.8500 மதிப்புள்ள பொருட்கள் வழங்க பட்டன. சிறப்பு பூஜை செய்யப்பட்டு அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் சங்கரநாராயண பட்டர் செய்தார். தக்கார் சுசீலா ராணி, நிர்வாக அலுவலர் அங்கையற்கண்ணி ஏற்பாடுகளை செய்திருந்தனர். அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் முன்னிலையில் 11 தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. சுந்தரராஜ பெருமாள் சன்னதியில் சிறப்பு தரிசனம் பெற்றனர். அறங்காவலர் செந்தில்குமார், கோயில் கண்காணிப்பாளர் பாலமுருகன், பி.ஆர்.ஓ., முருகன் உடனிருந்தனர். அலங்காநல்லுார் அலங்காநல்லுார் முனியாண்டி கோயிலில் 5 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தனர். வெங்கடேசன் எம்.எல்.ஏ., தி.மு.க., நகர் செயலாளர் ரகுபதி, அறங்காவலர் குழுத் தலைவர் அமுல்ராணி முன்னிலை வகித்தனர். கோயில் செயல் அலுவலர் சூரியன், சரக ஆய்வாளர் சாவித்திரி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மாரி, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை