உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை

ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை

அவனியாபுரம் : தேனி அல்லிநகரம் முத்து. இவர் 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றினார்.சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியில் பயிற்சியின்போது நடந்த வாகன விபத்தில் முத்து படுகாயம் அடைந்தார். சிகிச்சையில் இருந்த அவர் இறந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது.விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு கர்னல் ராஜீவன், திருமங்கலம் ஆர்.டி.ஓ., கண்ணன், போலீஸ் உதவி கமிஷனர் சீதாராமன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்பு கார் மூலம் ராணுவ வீரர் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ