மேலும் செய்திகள்
ஓய்வூதியர் பேரமைப்பு நிர்வாகிகள் தேர்வு
20-Aug-2025
மதுரை:'தமிழகத்தில் கேரளாவில் உள்ளதைப் போல 'முதியோர் ஆணையம்' அமைக்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தினர். இந்த அமைப்பின் மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் மதுரையில் நடந்தது. பேராசிரியர் ஆனந்தன் வரவேற்றார். செயலாளர் பெரியதம்பி முன்னிலை வகித்தார். பொருளாளர் பெருமாள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். மாநில பொதுச் செயலாளர் மனோகரன், போராசிரியர்கள் பார்த்தசாரதி, குணவதி உட்பட பலர் பேசினர். பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், சிவனுபாண்டியன், பாஸ்கரன், ராஜேந்திரன், லட்சுமணன், அரவிந்தன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
20-Aug-2025