உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஓய்வு போக்குவரத்து கழக தொழிலாளரே...

 ஓய்வு போக்குவரத்து கழக தொழிலாளரே...

மதுரை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வூதியம் பெற்று வருவோர், ஜனவரி முதல் மார்ச்சுக்குள் தங்கள் வாழ்நிலை சான்றிதழை வழங்க வேண்டும்'' என மதுரை மேலாண் இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர், தன்விருப்ப ஓய்வு பெற்றோர், மருத்துவத் தகுதியின்மையால் விடுவிக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுவோர், இறப்பின் காரணமாக குடும்ப ஓய்வூதியம் பெறும் வாரிசுகள் தங்கள் வாழ்நிலையை மெய்ப்பிக்கும் வகையில் 2026 ஜன.,2 முதல் மார்ச் 20 க்குள் மதுரை கோட்டத்தைச் சேர்ந்தவர்கள் மதுரை தலைமையகம், திண்டுக்கல்-1, தேனி, விருதுநகர் தலைமையகம், ஸ்ரீவில்லிப்புத்துார் கிளைகளில் ஏதாவது ஒரு இடத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதேபோல வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வைத்திருப்போர் அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் அந்தந்த பகுதியில் உள்ள இ சேவை மையத்தில் TNS- 103 பென்ஷனர்ஸ் லைப் சர்டிபிகேட் போர்டலில் 1.1.2026 முதல் 31.3.2026 வரையான காலத்தில் பதிவு செய்யலாம், எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ