மேலும் செய்திகள்
காப்பீட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
27-Nov-2025
மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். புதிய பென்ஷன்திட்டத்தை ரத்து செய்து, பென்ஷனை அரசே ஏற்று நடத்த வேண்டும். குறைந்தபட்ச பென்ஷன் ரூ.7,850 ஐ உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநிலத் தலைவர் கிருஷ்ணன், இணைப் பொதுச்செயலாளர் ஜேம்ஸ் கஸ்பார்ராஜ், துணைப் பொதுச்செயலாளர் தேவராஜ், செந்தில், திண்டுக்கல் மண்டலத் தலைவர் ஜெயபாண்டியன், பொருளாளர் ராஜேந்திரன், விருதுநகர் அமைப்பாளர் பரசுராமன் பங்கேற்றனர். மண்டல பொருளாளர் சவுரிதாஸ் நன்றி கூறினார்.
27-Nov-2025