உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழைக்கு சாய்ந்த நெற்பயிர்கள்

மழைக்கு சாய்ந்த நெற்பயிர்கள்

மேலுார் : கீழையூர் 12 வதுபெரியாறு பிரதான கால்வாயில் 8 மடையில் இருந்து 10, 11 மற்றும் 12வது கால்வாய் வழியாக கீழவளவு கம்பர் மலைப்பட்டிக்கு தண்ணீர் செல்கிறது. இத்தண்ணீரை பயன்படுத்தி 300 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். இப்பயிர்கள் தற்போது பெய்யும் மழை நீரில் சாய்ந்துவிட்டது.விவசாயி தர்மலிங்கம்: கூட்டுறவு சொசைட்டியில் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து நெல் பயிரிட்டுள்ளேன். 15 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் மழைக்கு பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் செய்வதறியாது திகைக்கிறோம். அதனால் வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதோடு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை