மேலும் செய்திகள்
மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்
23-Oct-2025
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரையில் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விவசாயி ராமகிருஷ்ணன்: ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால் பல ஏக்கர் நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தரையில் சாய்ந்து முளைக்கத் தொடங்கிவிட்டன. இதனால் ரூ.பல லட்சம் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால் இன்னும் அதிகமாக சேதம் ஏற்படும் நிலை உள்ளது. முன்னே உள்ள நிலங்களில் அறுவடை செய்யாததால் பாதையில்லாமல் பணிகளை தொடர முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
23-Oct-2025