உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாலிதீன் கழிவால் விபத்து அபாயம்

பாலிதீன் கழிவால் விபத்து அபாயம்

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் உள்ள 72 ஊராட்சிகள், பேரையூர், டி கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதி கடைகளில் பாலிதீன் பை பயன்பாடு அதிகமாக உள்ளது. பொருட்களை வாங்கிவிட்டு பையை கண்ட இடங்களில் வீசிச் செல்கின்றனர்.இப்பகுதி ரோட்டோரங்களில் பாலிதீன் பைகள் அதிக அளவில் கிடக்கின்றன. பத்து நாட்களாக காற்று அதிகமாக வீசுவதால் இப்பைகள் அனைத்தும் பறந்து வாகன ஓட்டிகளின்மீது விழுகின்றன. டூவீலரில் செல்வோர் மீது அவை விழுவதால் விபத்து அபாயம் உள்ளது. ரோட்டோரம் குவிந்து கிடக்கும் பாலிதீன் பைகளை அகற்ற ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ