மேலும் செய்திகள்
சாலை மறியல்
13-Sep-2025
உசிலம்பட்டி உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவர் மணிமண்டபத்திற்கான இடமாக பழைய அரசு பள்ளி, கள்ளர் மாணவர் விடுதி இருந்த பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மக்கள் பார்வர்டு பிளாக், பழைய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் போதும் கட்சியினர், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து தாசில்தார், டி.எஸ்.பி., முன்னிலையில் கட்டடங்கள் இரவிலும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை தேவர் சிலை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அரசு சிட்டிபஸ் மீது கல்வீசியதில் பஸ்சின் கண்ணாடி சேதமடைந்தது. நேதாஜி என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
13-Sep-2025