உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, சாலை பாதுகாப்பு மன்றம், வடக்கு மண்டல போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயலாளர் தர்மசிங் தலைமை வகித்தார். முதல்வர் (பொறுப்பு) ஜெயக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மண்டல போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், சாலை விதிகளை பின் பற்றுவதால் ஏற்படும் நன்மைகள், விபத்தால் ஏற்படும் இழப்புகள் குறித்து பேசினார். மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், கல்லுாரி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று கவனமாகவும், வேகத்தை குறைத்தும் வாகனம் ஓட்ட வேண்டும் என்றார். ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளார் சார்லஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை