உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாலைப்பணியாளர் ஆர்ப்பாட்டம்

சாலைப்பணியாளர் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நிர்வாகிகள் ராஜா, மாரி, நந்தகோபால், பரமேஸ்வரன் தலைமை வகித்தனர். பாண்டி வரவேற்றார். கோரிக்கை குறித்து கோட்டச் செயலாளர்கள் மனோகரன், ராஜா, அருள்தாஸ், பாலமுருகன், முருகேசன் பேசினர். மாநில பொருளாளர் தமிழ் துவக்கி வைத்தார்.சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.சாலை பணியாளருக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5200, ரூ.20,200, தரஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். நான்காயிரம் நிரந்தர பணியிடங்களை ஒழிக்கக் கூடாது. ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை, சலவைப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.மாநில துணைத் தலைவர் ராஜமாணிக்கம், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நீதிராஜா, செயலாளர் சந்திரபோஸ், பொருளாளர் பரமசிவன், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பாண்டிச்செல்வி, தொழில் பயிற்சி அலுவலர் சங்க செயலாளர் முத்துவேல், அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் சிவகுரும்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை