மேலும் செய்திகள்
சாலைப்பணியாளர்கள் போராட்டம்
4 hour(s) ago
மதுரை: மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் கண், காதுகள், வாயைப் பொத்தி மவுனப்புரட்சி இயக்கம் நடத்தினர். 41 கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைப் பணிநியமனம் வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்துவிட வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமரிக்க வேண்டும். தொழில்நுட்பட கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கு ரூ.5200, ரூ.20 ஆயிரத்து 200, தரஊதியம் ரூ.1500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்கம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா, மாநில பொருளாளர் தமிழ், மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், பணியாளர் சங்க மாநில செயலாளர் கிருஷ்ணன், செயலாளர் மனோகரன், மாவட்ட இணைச் செயலாளர் மாரியப்பன் பங்கேற்றனர்.
4 hour(s) ago