கேஜ் வீல்களால் சேதமாகும் ரோடுகள்
பேரையூர் : பேரையூர் பகுதியில் 'கேஜ் வீல்' பொருத்தப்பட்ட உழவு டிராக்டர்களால் அழுத்தம் தாங்காமல் ரோடுகள் சிதைந்து விடுகின்றன.கடினமாக உள்ள விவசாய நிலங்களை பண்படுத்த 'கேஜ் வீல்'கள் சுலபமாக உள்ளது. டிராக்டர்களின் டயர்களை கழட்டிவிட்டு இரும்புகளால் அமைக்கப்பட்ட 'கேஜ் வீல்களை' பொருத்தி வயல்களில் உழுகின்றனர். கேஜ் வீல்களை தார் ரோட்டில்இயக்கக் கூடாது. ஆனால் அருகாமையில் உள்ள வயல்களுக்கு தார் ரோட்டில் செல்வதால் அழுத்தமான கோடுகளும் பள்ளங்களும் ஏற்பட்டு ரோடுகள் சேதமடைகின்றன.சாப்டூர்- - அத்திபட்டி ரோடு அமைத்த வேகத்தில் கோடுகளாக வெட்டப்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதே போல் பல ரோடுகள் சேதமடைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.