உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோட்டிலா கொட்டுவது இறைச்சிக் கழிவுகளை

ரோட்டிலா கொட்டுவது இறைச்சிக் கழிவுகளை

வாடிப்பட்டி: பரவை - கோவில் பாப்பாக்குடி ரோட்டை ஆக்கிரமித்து குப்பை, இறைச்சிக் கழிவுகளை கொட்டுவது தொடர்கிறது. மேற்கு ஒன்றியம் கோவில்பாப்பாகுடி ஊராட்சி மதுரை நகரை ஒட்டிய வளர்ந்து வரும் பகுதி. இதனால் இங்குள்ள விளை நிலங்கள் யாவும் வீட்டடி மனைகளாக மாறி குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் வாகனங்களுக்கு 'பாடி' கட்டும் 'ஒர்க் ஷாப்'களும், தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன. பரவை ரோட்டில் பொதும்பு, அதலை கிராம மக்கள் மற்றும் விரிவாக்க பகுதியினர் சென்று வருகின்றனர். ஏராளமான ஏக்கரில் நெல் சாகுபடியும் நடக்கிறது. பரவை பேரூராட்சி குப்பைக் கிடங்கை அடுத்த ஓடை அருகே கோவில் பாப்பாக்குடி ஊராட்சியில் சேகரிக்கும் குப்பை, இறைச்சிக் கழிவுகளை கொட்டுகின்றனர். வாகன கழிவுகளையும் ரோடு வரை ஆக்கிரமித்து கொட்டி எரிக்கின்றனர். இங்கு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. புகைமண்டலமாக தெரியும் ரோடு, கூட்டமாக திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர். இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ