உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.25 கோடி

மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.25 கோடி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் முன்னிலையில் இக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள், 5 கோயில்களின் அன்னதான உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அறங்காவலர் குழு தலைவர், பிரதிநிதிகள், ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர், கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். ரொக்கம் ரூ.1 கோடியே 25 லட்சத்து 91,921 மற்றும் தங்கம் 482 கிராம், வெள்ளி 846 கிராம், வெளிநாட்டு பணம் பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ