உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஓடும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

 ஓடும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவாயில் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ.,ஓடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தலைவர் ரவிசங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டச் செயலாளர் ரபீக்,உதவிச் செயலாளர் ராம்குமார், செயலாளர் அழகுராஜா முன்னிலை வகித்தனர். ஏழாவதுசம்பள கமிஷன் பரிந்துரைப்படி அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது கி.மீ., அலவன்சை அதற்கேற்ப உயர்த்த வேண்டும். ஆனால் இன்னும் உயர்த்தாததால் ஓடும் தொழிலாளர்கள் பாதிக்கின்றனர். கி.மீ., அலவன்சுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. ஓடும் தொழிலாளர் பிரிவுக்கான வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். முன்னாள் கோட்டத் தலைவர் தாமரைச் செல்வன், உதவி கோட்ட செயலாளர்கள் கருப்பையா, நித்யராஜ், முத்துகிருஷ்ணன், மாரிமுத்து, லெனின், முத்துக்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை