உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல்

மதுரை : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடந்தது.மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் அமுதரசன், பொருளாளர் அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி கோரிக்கை பற்றி விளக்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரபோஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.காலியாக உள்ள 4000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம ஊராட்சிகளை மக்கள் தொகை அடிப்படையில் நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைத்துள்ளனர். அப்படி இணைக்காமல் கிராம ஊராட்சிகளை எண்ணிக்கை அடிப்படையில் 2 அல்லது மூன்று கிராம ஊராட்சிகளாக கூடுதலாக பிரிக்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளனர். ஏற்கனவே உள்ளது போல 25 சதவீத பணி நியமனத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை