உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊரக வளர்ச்சித்துறை பணிகள்: கமிஷனர் ஆய்வு

ஊரக வளர்ச்சித்துறை பணிகள்: கமிஷனர் ஆய்வு

மதுரை:மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கமிஷனர் பொன்னையா ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ., காலனியில் ரூ.2 கோடி செலவில் திட்ட இயக்குனர் குடி யிருப்பு கட்டுமான பணிகளை பார்வையிட்டார். கலெக்டர் பிரவீன்குமார் உடனிருந்தார். மேற்கு ஒன்றியம் வீரபாண்டியில் ரூ.3.5 கோடி செலவில் அய்யர்புதுார் முதல் கூளப்பாண்டி வரை 1.9 கி.மீ.,க்கு தார்சாலை பணிகள் நடக்கின்றன. கொடிமங்கலம் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் நாற்றங்கால் பண்ணையில் செடிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு ஆவி 470, பூவரசு 331, புங்கன் 2050, நாவல் 105, இலவம் பஞ்சு 2771, வாகை 2503, வேங்கை 250, புளி 500, மயில்கொன்றை 517, புன்னை 70 உள்பட 10 ஆயிரத்து 786 மரக் கன்றுகள் மண், இயற்கை எருவுடன் பாலிதீன் கவர்களில் நிரப்பி அவற்றை தினமும் ஏராளமான பெண்கள் பராமரித்து வருகின்றனர். வெளிச்சநத்தத்தில் முதலமைச்சரின் மறுவீடுகள் கட்டுமான திட்டத்தில் ரூ. 2.40 லட்சத்தில் வீடுகள் கட்டப்படுகின்றன. மேற்கண்ட பணிகளை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !