உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க ரத்ததான முகாம்

ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க ரத்ததான முகாம்

மதுரை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க 39வது அமைப்பு தினத்தையொட்டி ரத்ததான முகாம் நடந்தது. திட்ட இயக்குனர் வானதி துவக்கி வைத்தார். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க கட்டடத்தில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மாநில துணை தலைவர் சோமசுந்தரம் துவக்கி வைத்து பேசினார். அமைப்பாய் திரள்வோம் தலைப்பில் தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் பொது செயலாளர் மாதவராஜ், வீரபாகு, ஜம்ருத்நிஷா பேசினர். மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் நிறைவுரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் அமுதரசன் நன்றி கூறினார். மாநில செயலாளர் பாலாஜி, செயற்குழு உறுப்பினர் சிவமணி, மாவட்ட துணை தலைவர்கள் ஜெயராமன், ஆசை, பெரியகருப்பன், பிரபு, இணை செயலாளர்கள் ஜெயபாலன், மகேஸ்வரன், ஸ்ரீவித்யாதேவி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி