உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் * உசிலை விவசாயிகள் குமுறல்

மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் * உசிலை விவசாயிகள் குமுறல்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி தாலுகா விவசாயிகள் குறைதீர் கூட்டம் துணைத் தாசில்தார்கள் தாணுமூர்த்தி, முருகன் முன்னிலையில் நடந்தது. திரளான விவசாயிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில் பேசிய விவசாயிகள், 'கண்மாய்களில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று, செங்கல் சூளைகள் உட்பட பிற பணிகளுக்கு பெரிய இயந்திரங்களின் உதவியுடன் கிராவல் மண் எடுத்துச் செல்கின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தால், அவர்களை மணல் திருடுவோர் மிரட்டுகின்றனர். புகார் செய்யும் விவசாயிகள் குறித்த தகவல் அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது. இப்படி அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மண் திருட்டு நடக்கிறது. எனவே, உசிலம்பட்டி, செல்லம்பட்டி கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது' என்றனர்.மேலும் சில விவசாயிகள், 'அசுவமாநதி, வண்ணாத்திப்பாறையில் இருந்து போத்தம்பட்டி கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஓடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இங்கு தடுப்பணை கட்டும்போது ஓடைகளின் முழுமையான அகலத்திற்கு கட்ட வேண்டும்.உசிலம்பட்டி, செல்லம்பட்டி வட்டார நீர்நிலைகள், நீர்வரத்து ஓடைகள், அவற்றின் தற்போதைய நிலை குறித்து அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். உசிலம்பட்டி சந்தை திடல், கண்மாய்கரை, மதுரை, தேனி, பேரையூர் ரோடுகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றனர்.வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் விநியோகிக்கப்படுகிறது. ஆதார், சிட்டா, அடங்கல் ஆவணங்களை கொடுத்து மரக்கன்றுகள் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை