| ADDED : ஜன 11, 2024 04:01 AM
வாடிப்பட்டி : பரவை பேரூராட்சியில் துடைப்பம் இல்லாததால் துப்புரவு பணியாளர்கள் குப்பையை கையில் சேகரிக்கும் அவலம் நிலவுகிறது.இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. வீடு வீடாக குப்பையை சேகரிக்க 19 நிரந்தர துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு என 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். ஒரு வேன், 3 மினி வேன்கள், 20 பேட்டரி வாகனங்கள் வீடுகளில் குப்பையை சேகரிக்க பயன்படுத்தப்படுகிறது.சில வாரங்களாக துப்புரவு பணியாளர்களுக்கான துடைப்பம், கையுறை உள்ளிட்ட உபகரணங்களின்றி சுகாதார பாதுகாப்பற்ற முறையில் குப்பையை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை -- திண்டுக்கல் ரோட்டில் குப்பையை துடைப்பம் இன்றி கையில் வைத்துள்ள தகரம், பலகை, சிலேட்களை வைத்து அள்ளுகின்றனர். ஒரு கையில் மட்டுமே பாதுகாப்பு கையுறை அணிந்துள்ளனர். சிலர் அதுவும் அணியாமல் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.செயல் அலுவலர் செல்வக்குமார்: துடைப்பம் ஆர்டர் செய்துவிட்டோம். ஒப்பந்ததாரர் தாமதிக்கிறார் என்றார்.