உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

வாடிப்பட்டி: திருவாலவாயநல்லுார் ஊராட்சி பகுதியில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சகுபர் சாதிக், துணைத் தலைவர் மாலிக் முன்னிலை வகித்தனர். உதவி ஆளுநர் சோமசேகர், மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன், சங்கத் தலைவர் வாசுதேவன், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் கன்னியப்பன், முன்னாள் தலைவர்கள் சந்தீப், கணேசன், தாமரைக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள வீதிகளில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன. ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பாதுகாப்பு வேலிகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ