உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

கல்லுாரி கருத்தரங்கம் மதுரை: யாதவர் கல்லுாரியில் 'திரையிசைப் பாடல்கள் இலக்கியம் ஆகுமா' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் ராஜு தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் சோழ.நாகராஜன் திரையிசைப் பாடல்களில் உள்ள தாலாட்டுப் பாடல்கள், பெண்ணியச் சிந்தனை, சமுதாயச் சீர்திருத்தம் பற்றி பேசினார். தமிழ் உயராய்வு மைய தலைவர் பரந்தாமன், பார்க் பிளாசா குழும நிறுவனர் கண்ணன் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித் திட்டம் மதுரை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை முன்னிட்டு யோகா, போட்டிகள் நடந்தன. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்றுநர் தருமராஜாவின் மேற்பார்வையில் பயிற்சி பெற்றனர். முதல்வர் ராஜேஸ்வர பழனிசாமி, சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். யுவபாரத் திட்ட அலுவலர் மீனாட்சி, போலீஸ் கண்காணிப்பாளர் பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் பங்கேற்றனர். வாழ்க்கை திறன் நிகழ்ச்சி திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை சுயநிதிப்பிரிவு காம்கேப் சங்கம் சார்பில் 'ஆரோக்கிய வாழ்க்கை முறை நீண்ட ஆயுளுக்கு அஸ்திவாரம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி அக் ஷயா வரவேற்றார். வாடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஸ்டாலின் பேசினார். மாணவி ஷிவானி நன்றி கூறினார். மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு வாடிப்பட்டி: தாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழா நடந்தது. சேவா வாரத்தையோட்டி செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வறுமை நிலையில் உள்ள 30 ஏழை மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டது. பா.ஜ., ஓ.பி.சி., அணி முன்னாள் மாநில துணைத் தலைவர் முரளி ராமசாமி வங்கி கணக்கு புத்தகங்களை வழங்கினார். ஆசிரியர்கள் கலைச்செல்வி, மகேஸ்வரி, வசந்தா, அஞ்சலக பணியாளர்கள் பிரியா, சோபனா, கோபாலகிருஷ்ணன், விக்னேஷ் கலந்து கொண்டனர். என்.எஸ்.எஸ்., முகாம் மதுரை: சி.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சிறப்பு முகாம் எல்.கே.டி., நகரில் துவங்கியது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் யாசின்முகமது, ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை ராமலட்சுமி வரவேற்றார். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் ஜவஹர்லால் நேரு, சி.புளியங்குளம் ஊராட்சி தலைவர் சவுந்திரபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். திட்ட அலுவலர் கோகிலா விளக்கவுரையாற்றினார். அக்.,2 வரை முகாம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை