உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பயிற்சி முகாம் பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி உன்னத் பாரத் அபியான் சார்பில், யு.ஜி.சி., பண்பாட்டுத்துறை உத்தரவுப்படி ஓவிய பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். பேராசிரியர் விஜயகுமார் வரவேற்றார். பேராசிரியர் மாலினி பேசினார். ஓவிய பயிற்சியாளர் ரஞ்சித்குமார் பயிற்சி அளித்தார். ஓவிய போட்டியில் மாணவி பிரித்திகாஸ்ரீ முதல் பரிசு பெற்றார். பேராசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். பேராசிரியர்கள் கார்த்திகைச்செல்வி, பிரேம்குமார், தமீம் அசாருதீன் ஒருங்கிணைத்தனர். நுால் வெளியீட்டு விழா மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரி ஆங்கிலத்துறை, உயராய்வு மையம் சார்பில் துறையின் இணைப்பேராசிரியர் இளங்கோவன் (ஜனமித்திரன்) எழுதிய 'கனவுகளின் அல்காரிதம்' சிறுகதை நுால் வெளியிட்டு விழா நடந்தது. துறைத் தலைவர் சுபத்ரா தேவி வரவேற்றார். பொறுப்பு முதல்வர் சீனிவாசன் ஜனமித்திரன் எழுதிய கதைகளின் போக்கை மாணவர்களுக்கு விளக்கினார். தமிழிலக்கிய அறிஞர் ஜமாலன் முதல் பிரதியை வெளியிட இணைப் பேராசிரியை செந்தில் வீரகுமாரி பெற்றுக்கொண்டார். நவீன தமிழ் இலக்கியத்தில் சிறுகதையின் வளர்ச்சி உள்வாங்கப்படும் விதத்தை காந்திகிராம நிகர்நிலை பல்கலை தமிழ்த்துறைத்தலைவர் ஆனந்தகுமார் விளக்கினார். ஜனமித்திரனின் சிறுகதைகளை எழுத்தாளர் முருகவேல் விவரித்தார். இணைப் பேராசிரியர் ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். வாசகர் வட்டம் மதுரை: மதுரை வாசகர் வட்டம், அல்அமீன் மேல்நிலைப் பள்ளி சார்பில் 'நாமும், நுாலும், நுாலகமும்' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி நடந்தது. வாசகர் வட்ட அமைப்பாளர் சண்முகவேலு தலைமை வகித்தார். பேராசிரியர் ராமமூர்த்தி நுால் சிறப்பு, நுாலக பயன்பாடு குறித்து பேசினார். தலைமை ஆசிரியர் ஷேக்நபி, தமிழாசிரியர் தவுபிக்ராஜா உட்பட பலர் பேசினர். இயற்பியல் கருத்தரங்கம் மதுரை: மதுரைக் கல்லுாரி சுயநிதிப்பிரிவு இயற்பியல் துறை சார்பில் சிறப்பு கருத்தரங்க கூட்டம் வாரிய பொருளாளர் ஆனந்த ஸ்ரீனிவாசன் தலைமையில் நடந்தது. கல்லுாரி வாரிய உறுப்பினர் அமுதன், சுயநிதிப்பிரிவு முதன்மை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் முன்னில வகித்தனர். போஸ் ஐன்ஸ்டீன் கழக தலைவர் செல்வன்ஆதித்யா வரவேற்றார். சேதுபதி பள்ளி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், 'அறிவியலும் சமூகமும்' என்ற தலைப்பிலும், அறிவியலும் சமூகமும் என்ற தலைப்பிலும் பேசினார். மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் அங்கயற்கண்ணி, பேராசிரியர்கள் பாண்டி, ராமகிருஷ்ணன், பங்கேற்றனர். செயலாளர் யுவதர்ஷனி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !