உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி கல்லுாரி செய்தி

பள்ளி கல்லுாரி செய்தி

வாக்காளர் தின கொண்டாட்டம்

மதுரை: அம்பிகா பெண்கள் கல்லுாரியில் தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. முதல்வர் சரளா தேம்பாவணி தலைமை வகித்தார். துறை பேராசிரியை சிந்து வரவேற்றார். காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் தேவதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அனைவரும் வாக்காளர் உறுதிமொழி எடுத்தனர். துறைத் தலைவர் விஜயலட்சுமி வரவேற்றார். பேராசிரியை அபிநயா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி ஆங்கிலத்துறையினர் செய்தனர்.

சான்றிதழ் வகுப்பு

மதுரை: மதுரைக் கல்லுாரி, கம்பன் கழகம் இணைந்து சான்றிதழ் வகுப்பு நடத்தியது. கல்லுாரி முதல்வர் சுரேஷ், பேராசிரியர் நாகராஜன் துவக்கவுரை நிகழ்த்தினர். தமிழ்த்துறைத் தலைவர் தனசாமி வரவேற்றார். 'சுந்தரகாண்ட பாத்திரங்கள்' தலைப்பில் செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி பேசினார். பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் கார்த்திகேயன், ராஜா, விமல்,கண்ணன்ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

நாட்டுப்புறக் கலைவிழா

மதுரை: யாதவர் கல்லுாரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க தமிழ்ச் சங்கம் சார்பில் உலகத்தமிழ் நாட்டுப்புறக் கலைவிழா முதல்வர் ராஜூ தலைமையில் நடந்தது. கல்லுாரி தமிழ் உயராய்வு மையத் தலைவர் பரந்தாமன் வரவேற்றார். செயலாளர் ஆர்.வி.என் கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். பார்க் பிளாசா குழும நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், அமெரிக்க தமிழ்ச்சங்கம் நிறுவனர் பிரகாஷ் சுவாமி பல்துறை சார்ந்தவர்களுக்கு முத்தமிழ் விருது வழங்கினர். சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறை தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். மாணவர்களின் கலைத்திறன் போட்டிகள் நடந்தன. வழக்கறிஞர் ராம வைரமுத்து, காரைக்குடி சிவாலயா நாட்டியப்பள்ளி நடன ஆசிரியர் ஆனந்த் குருஜி நடுவர்களாக பங்கேற்றனர். பேச்சாளர் ஹரிபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். உதவிப் பேராசிரியர் பாஸ்கரன்ஒருங்கிணைத்தார்.மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் ஞானவேல், கல்லுாரி தலைவர் ஜெயராமன், சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வளாகத்தேர்வு

மதுரை: கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் தனியார் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கான வளாகத்தேர்வு நடந்தது. எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், மெக்கானிக்கல் பிரிவை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன அதிகாரிகள் கண்ணன், லுாயிஸ் தேர்வு நடத்தினர். 62 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சிக்கு செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்தன் வரவேற்றார். வேலைவாய்ப்பு அதிகாரி சகாதேவன் ஏற்பாடு செய்தார்.

தேசிய கருத்தரங்கு

மதுரை: பாத்திமா கல்லுாரியில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், மனையியல், கணினி அறிவியல் துறைகள் சார்பில் தொழில் துறைக்கும், கல்வியாளர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்த தேசிய கருத்தரங்கு நடந்தது. முதல்வர் செலின் சகாயமேரி, டீன் கலா தலைமை வகித்தார். பேராசிரியர் ரொனால்டோ அனுாப், 'கல்லுாரியிலிருந்து கார்ப்பரேட் வரை தொழில்களுக்கான தயாரிப்பு' என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர்கள் சண்முக வடிவு, சுரேஷ் கோவிந்தன், பால சீனிவாசன், ஆனந்த சிவஞானம், கீர்த்தி, சிவதர்ஷினி பேசினர். பேராசிரியைகள் பிரியதர்ஷினி, ஆன்சிம்மா, அருள்தீபா, ஆஸ்நெட் மேரி, கார்த்திகா, விமலா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

விளையாட்டு விழா

மதுரை: பரவை மதுரை டில்லி வேர்ல்டு பப்ளிக் பள்ளியில் 5வது விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் சுனிதாதேவி வரவேற்றார். தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். இணைத்தலைவர் சரவண பிரதீப், இயக்குநர் சக்தி பிரனேஷ் முன்னிலை வகித்தனர். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா தேசியக் கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். துணைமுதல்வர் பாண்டியராணி, கல்வி ஒருங்கிணைப்பாளர் பிரபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

கருத்தரங்கு

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி நிதி மற்றும் பொருளாதார இலக்கிய கழகம் சார்பில் 'உங்கள் எதிர்காலத்தை நிதி கல்வியறிவுடன் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். இலக்கிய கழக ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா வரவேற்றார். ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் சண்முகப்பிரியா, துணை மேலாளர் பியூலா பேசினர். மாணவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள் ஹரிஷ், ஹரிணி தொகுத்துரைத்தனர். மாணவர் நவீன் நன்றி கூறினார்.

பொங்கல் விழா கொண்டாட்டம்

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் ராஜேந்திரபாபு குடும்பத்தினர் அறக்கட்டளை சார்பில் நடந்த பொங்கல் விழாவை முதல்வர் ராமசுப்பையா துவக்கி வைத்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். பேராசிரியர்கள், மாணவர்கள் பானை உடைத்தல், சிலம்பம், பரமபதம், கயிறு இழுத்தல் போட்டிகளில் பங்கேற்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளை முனிக்கு மரியாதை செய்யப்பட்டது. மாட்டு வண்டிகளில் மாணவியர் மைதானத்தில் வலம் வந்தனர். நுாலகர் லோகநாயகி ஒருங்கிணைத்தார். சுவீடன் நாட்டின் தம்பதி 'லெமன் வித் ஸ்பூன்' போட்டியில் 2ம் பரிசு வென்றனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

மேலுார்: அரசு இருபாலர் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நெடுஞ்சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் வரலட்சுமி துவக்கி வைத்தார். ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. உதவி கோட்ட பொறியாளர்கள் பாலமுருகன், சாந்தினி, இளநிலை பொறியாளர் இந்திரா பிரியதர்ஷினி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், எஸ்.ஐ., முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொங்கல் விழா

சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் பொங்கல் விழா மற்றும் விவேகா நுண்கலை மன்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலர் சுவாமி அத்யாத்மானந்த, வேதானந்த, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரான முன்னாள் மாணவர் ரவிக்குமார், துணை முதல்வர் கார்த்திகேயன், முதன்மையர் ஜெயசங்கர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் எல்லைராஜா வரவேற்றார். மாணவர்களின் விளையாட்டு, உடற்பயிற்சி, கலை நிகழ்ச்சி நடந்தது. மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், நிரேந்தன், சந்திரசேகரன், அருள்மாறன், சுவாமிநாதன், தர்மானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை