போதை ஒழிப்பு விழிப்புணர்வு
போதை ஒழிப்பு விழிப்புணர்வுl மதுரை மாத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு எஸ்.ஐ.,க்கள் அர்ஜூன், பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஐ., பால்பாண்டி, ஏட்டு கார்த்திக் முன்னிலையில் நடந்தது.போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், தடுக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் சாந்தாராம் தலைமை வகித்தார். போதை பொருள் எதிர்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் ஏற்பாடு செய்தார். ஆசிரியர்கள் லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.l மதுரை அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சிவசக்தி தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தார்.புதுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலீபன் பேசினார். எஸ்.ஐ.,க்கள் மாயன், தங்கம், இளையராஜா, ஞானசேகரன், தமிழ் ஆர்வலர் ஆதித்தா பங்கேற்றனர். மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியேற்றனர்.l மதுரை இளமனுார் அரசு மேனிலைப்பள்ளியில் சிலைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வம் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழியேற்றனர். தலைமையாசிரியை கனகலட்சுமி வரவேற்றார். போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆசிரியர் மகேந்திர பாபு பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏட்டுகள் முருகேசன், மணிமாறன், பூபதிராஜா, ஆசிரியர்கள் லஜபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாணவர் சேர்க்கைமதுரை: காந்தி மியூசியத்தில் உள்ள காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சான்றிதழ், பட்டய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆக. 16 வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் யோகா பட்டய படிப்புக்கும், டிகிரி படித்தவர்கள் யோகா முதுநிலை பட்டய படிப்புக்கும், காந்திய சிந்தனை பட்டயபடிப்புக்கு, அதற்கான சான்றிதழ் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதல்வர் தேவதாஸை 99941 23091 ல் தொடர்பு கொள்ளலாம். கல்லுாரி கருத்தரங்கு திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் மெடிக்கல் கோடிங் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி தாளாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தனர். மாணவி அங்காள ஈஸ்வரி வரவேற்றார். ஷமா அகாடமி சி.இ.ஓ., டார்வின் பேசினார். மாணவி அஸ்வினி நன்றி கூறினார்.போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உசிலம்பட்டி: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள், போலீசார் இணைந்து போதைப் பொருள், அதன் பாதிப்பு, அதனை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். டி.எஸ்.பி., சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்த், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் சிவக்குமார், திருச்செல்வம், பிரேமலதா, போதைப்பொருள் ஒழிப்பு இயக்க அலுவலர் ரவிச்சந்திரன் பங்கேற்றனர். உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிகழ்ச்சியில் நிலைய மருத்துவ அலுவலர் மாதவன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். எழுமலை அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன், குணசுந்தரி, செல்வம் ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எழுமலை எஸ்.ஐ., ராஜா, போலீசார் சங்கர், சடையாண்டி, விஜயராகவன் மாணவர்களுக்கு போதைப்பொருள் தீமை குறித்து பேசினர்.விழிப்புணர்வு ஊர்வலம்மேலுார்: சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர்கள் சிவசக்தி, ஜெயந்தி, சண்முகசுந்தரம் தலைமை வகித்தனர் . பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தில், போதைப் பொருளுக்கு எதிராக கோஷமிட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.